இலங்கை பிரதான செய்திகள்

விஜயகலா பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவிலகல் கடிதத்தை இன்று மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளார். தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தநிலையில் தற்போது அவர் தனது பதவிலகல் கடிதத்தினை கையளித்துள்ளார்

யாழில் நடைபெற்ற நிகழ்வில் மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் என உரை நிகழ்த்தி இருந்தமை தொடர்பில் தெற்கில் சிங்கள அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தது.

அந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவிக்கும் போது , தான் தமிழ் மக்களுக்காக பதவியை துறக்க உள்ளேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • It’s just a political stunt. This lady is playing just some ones directions. Who knows who behind this CIA or KGB ha ha ha. May God bless mother Sri Lanka.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers