குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன் “என குறிப்பிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில் அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Add Comment