Home இந்தியா சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு விஜய் – ஏ.ஆர்.முருகதாசுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு விஜய் – ஏ.ஆர்.முருகதாசுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

by admin


சர்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படத்தை வெளியிட்டமைக்கு எதிராக , நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் சர்கார். இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் 21ம் திகதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. . இதில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சில சுகாதார அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், புகை பிடித்தபடி விஜய் இருக்கும் சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியிலிருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசிடம் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

அந்த சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றாவிட்டால், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More