பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் தோல்வி

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்தர வீராங்கனையும் பிரென்ச் ஓபன் தொடர் சம்பியனுமான சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவியுள்ளார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சீனதைபேயின் சு-வெய் ஹ 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்றுள்ளார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.