இலங்கை பிரதான செய்திகள்

அலோசியஸ், தொலைபேசியில் உரையாடியவர்களை, அடையாளம் காணும் பொறுப்பு, CIDயிடம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் தொலைபேசி உரையாடிய நபர்களை அடையாளம் காணும் பொறுப்பை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாக வெலிகடை சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து செல்போன்களும் சிம் அட்டைகளும் சிறைச்சாலை தலைமையகத்தின் புலனாய்வு பிரிவினரால் அண்மையில் கைப்பற்றப்பட்டது.

இந்த சிம் அட்டைகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அர்ஜூன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு அருகில் வேறு ஒரு காவலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். சிம் அட்டை மூலம் தொடர்புக்கொண்ட நபர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.