இலங்கை பிரதான செய்திகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி, அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர். இவருக்கு பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கி குறித்த யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  நாளைய தலைமுறை என்கின்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில் அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக செய்வதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
00

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • Wow this is nice political business. Like India just selling the public position for sake of the dirty money. Weldone ya.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers