குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
வடக்கு மாகாண அடுத்த முதலமைச்சர் பதவிக்கு சி.வி. விக்னேஸ்வரனே மிகவும் தகுதியானவர் என ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விக்னேஸ்வரன் வடக்கில் மக்கள் மத்தியில் பெற்றுள்ள வரவேற்பு காரணமாக வேறு ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்கக் கூடிய வாய்ப்பை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, தனித்து செயற்பட்டு வருகிறது.
Add Comment