தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு மேலும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ள விஜய் சேதுபதி தற்போது கன்னடப் படம் ஒன்றில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘ஜுங்கா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில், ‘சீதக்காதி’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகனாக விஜய்சேதுபதியே உள்ளார். அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால் அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ கூட நடித்து விடுவார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கின்றார்.
Add Comment