இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

தேசிய ரீதியில் முதன்முறையாக மன்னார் மாவட்டத்துக்கு குத்து சண்டைப் போட்டியில் பதக்கம்(படம்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மடு வீதி கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தர்சன் தேசிய ரீதியில் நடை பெற்ற குத்து சண்டை போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை தனதாக்கி மன்னர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் .

தேசிய ரீதியில் மன்னார் மாவட்டம் குத்து சண்டை போட்டியில் பதக்கம் பெறுவது இதுவே முதல்முறையாகும் போதிய வளமும் பொருளாதார வசதியுமின்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இம் மாணவன் இச் சாதனையை படைத்துள்ளார் .

மேலும் சர்வதேச ரீதியில் சாதிக்க துடிக்கும் இவர் தனது பயிட்சிகளுக்கு தேவையான உதவிகள் எதுவும் இல்லாதிருப்பதாக கவலை தெரிவிக்கின்றார் .

சாதனையாளர் தர்சன் இன்று கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களால் மடு சந்தியிலிருந்து மோட்டார் வாகன தொடரணி மூலம் அழைத்து செல்ல பட்டு பாராட்டு விழா இடம்பெற்றது. இவ் விழாவில் அருட்த்தந்தையர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் மரிய சீலன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.