இலங்கை பிரதான செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நண்பிகள்…


இளம் யுவதிகள் இருவர், இலங்கையின் கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். நேற்றிரவு (11-07-2018) 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே, புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில், தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.