இலங்கை பிரதான செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் தயார்…..

பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை,  இன்று ஜனாதிபதிக்கு வழங்க உள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக, நிதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தககம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எதிர்வரும் தினங்களில் பேச்சுவார்த்ததை நடத்த உள்ளதாகவும், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமானால் விரைவாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் சில இருப்பதாகவும், சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் மரண தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்பட்டு, இருவருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

எனினும் குறித்த இருவரும் பயிற்சியின் பின்னர் கடமைக்கு சமூகமளிக்காததனால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவிதுள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • I am ready to apply for the position as a Alugose for executioner for those death sentences in our mother Sri Lanka for clean up those messy unlawful criminals in our country. May God bless our mother Land.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers