இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வுகள் – யாழ் – கிளிநொச்சியில் 14ம் 15ம் திகதிகளில்


காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தச் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் 7 ஆணையாளர்களும் குறித்த அமர்வில் பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , சிவில் சமூக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியளாளர்கள் போன்றோரையும் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர்; அலுவலகம் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்பலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.