சென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தபின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தி வருகின்றனர் எனவும் மக்கள் கமராக்களை பொருத்தும் போது வீடு அமைந்துள்ள தெருவை கண்காணிக்கும் விதத்திலும் பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் காவல்துறையினர் படிப்பதற்காக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் திறக்கப்பட்ட நூலகம் போன்று அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment