தற்போது பல முக்கிய படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய முதல் படத்தில் தான் இருந்த கோலத்தை நினைத்துப் பார்ப்பதாக கூறியுள்ளார். தன்னைப் போலன்றி தற்போது நடிக்க வரும் நாயகிகள் ஆர்வத்துடனும் திறமையுடனும் வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இயல்பாக நடிப்புடன் இயல்பாகவே பேசும் நடிகை ஐஸ்வர்யா, ஒரு பேட்டியில் ’என் முதல் படத்தில் என்னை பார்க்கும்போது மிகவும் வெட்கமாக இருப்பதாகவும் அவ்வாறான கோலத்தில் தான் இருந்திருந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் நாளுக்கு நாள் தன்னை தானே வளர்த்துக்கொள்வது எப்படி என்று கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இப்போது நடிக்க வருகின்ற கதாநாயகிகள் வரும்போதே உடை அலங்காரம், திறமை, அறிவுடன் வருவதாகவும் கடின உழைப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார். துருவ நட்சத்திரம், சாமி ஸ்கொயர், வடசென்னை, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா தற்போது நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment