குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நேற்று(12.07.18) திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுமான பணிகளின் தரம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு பணித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பசுபபதிபிள்ளை தவநாதன் ஆகியோரின் இருபது இலட்சம் ரூபா நிதியிலும், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினத்தின் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு அமைக்கப்பட்ட புதிய கட்டத்தின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு, 42 இல்ட்சம் ரூபா பெறுமதியில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மற்றும் மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை அடுத்து முதலமைச்சர் மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர் நேற்றைய( 12) தினம் நிகழ்வில் வைத்து கருத்து தெரிவித்த போது வெளிச்சுவர் நெடுகவும் வெடிப்புக்கள், கட்டிய 5,6 மாதங்களில் இத்தனை வெடிப்புக்கள் வரவேண்டிய அவசியமில்லை. எமது அமைச்சின் செயலாளர் விரைவில் பொறியியலாளர்களைக் கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று உறுதிமொழி அளிக்கின்றேன். என்றார் மேற்படி ஓப்பந்த பணிகளை கட்டடங்கள் திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment