Home பிரதான செய்திகள் இதுவரை நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்தது

இதுவரை நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்தது

by admin

இதுவரை நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைவர் ஜியானி இன்பான்ரினோ (Gianni Infantino ) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மொஸ்கோவில் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என தன்னால் உறுதிபடக் கூற முடியும் எனத் தெரிவித்த அவர் உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஸ்யாவுக்கு நன்றி தெரிவிபடபதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முறை பயன்படுத்திய வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது எனவும் இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை எனவும் கால்பந்துப் போட்டியில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியை நேரில் காண சுமார் 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஸ்யா வந்துள்ளனர் எனவும் உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் தொலைக்காட்சி மூலம் மூலம் கண்டு களித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More