பிரதான செய்திகள் விளையாட்டு

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி


தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்ட வித்தியாசத்தில் .இலங்கை வெற்றியீட்டியுள்ளது. காலியில் கடந்த 12ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 287 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்சை தென்னர்பிரிக்கா 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 161 ஓட்டங்கள் ; முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை ஆரம்பித்து 190 ஓட்டங்களைப் பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி 351 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்ததனால் 352 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இலங்கை 278 ஓட்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers