பிரதான செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – டோனி இரு சாதனைகள்


லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது. நாயணச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 50 ஓவரகளின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, 323 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்தி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 236 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் எம்.எஸ்.டோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தது மற்றும் 300 கட்ச்கள் பிடித்தமை என இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.