இந்தியா பிரதான செய்திகள்

மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழகத்தில் 77,785 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற உப நீதிமன்றங்களிலும் நேற்று லோக் அதாலத் எனப்டும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

.இதில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அ தில், 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் இறந்த தம்பதிக்கு இழப்பீடு கோரி அவர்களது மகள்மார் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு 1 கோடியே 5 லட்சம் மூபா இழப்பீடு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.