இலங்கை பிரதான செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், இலவச மருத்துவ முகாம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமம் மற்றும் தேவன் பிட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.

மாந்தை பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் பொது மண்டபம் மற்றும் தேவன் பிட்டி பொது மண்டபம் ஆகிய இரு இடங்களில் குறித்த விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.

இதன் போது வைத்தியர்களின் இலவச வைத்திய பரிசோதனைகள் இடம் பெற்றதோடு, இலவசமாக மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் தேவைப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளுக்கு அமைவாக அமைவாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த இலவச வைத்திய முகாமில்  இரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 200 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.