Home சினிமா ரஜினியுடன் விரைவில் இணையும் விஜய்சேதுபதி – ஒரே சமயத்தில்ஒரு நடிகரின் நான்கு பட வெளியீட்டு விளம்பரங்கள்!!

ரஜினியுடன் விரைவில் இணையும் விஜய்சேதுபதி – ஒரே சமயத்தில்ஒரு நடிகரின் நான்கு பட வெளியீட்டு விளம்பரங்கள்!!

by admin

ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கின்றார். இந்த நிலையில் படத்தை இயக்கும்  கார்த்திக் சுப்புராஜ்   படத்திற்குரிய ஏனைய வேலைகளை நிறைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  இப் படத்தில் விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும்  காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார். இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் பின் வேலைகளை இப்போதே ஆரம்பித்துள்ளார்.

அவர் நடிக்கும் மற்ற படங்களான சீதக்காதி மற்றும் 96 படங்களின் விளம்பர வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுளளன. இவற்றைத் தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பரப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்கள் இந்த படங்களின் விளம்பர வேலைகளை முடித்துக்கொண்டு ரஜினி படக் குழுவுடன் விஜய்சேதுபதி இணையவருக்கிறார்.  ஒரே நேரத்தில் நடிகர் ஒருவரது  நான்கு படங்கள் வெளியீட்டுக்கான விளம்பரப்படுத்தப்படுவது அண்மைய காலத்தில் இடம்பெறாத நிகழ்வாகும். நடிகர் விஜய் சேதுபதியே அச் சாதனையை அடைந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More