குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வவுனியா மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் விளிம்பில் உள்ள நெடுங்கேணி- வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி பிறப்பு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமத்தில் தமிழ் மக்களுடைய வரலாற்றுத் தொன்மையை வைத்திருக்கும் வெடுக்குநாறி மலை திட்டமிட்ட குடியேற்றங்களாலும் பெளத்த மயமாக்கலாலும் ஆக்கிரமிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இந்த மலையையும் அங்குள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தையும் நெடுங்கேணி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் பல கிலோ மீற்றர் தூரம் காட்டு பாதைகள் வழியாக நடந்து சென்று ஆலயத்தை வழிப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment