இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.கோட்டைக்குள் ஆடிப்பிறப்பு.. (படங்கள் இணைப்பு)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

யாழ்.கோட்டை பகுதியில் அகழ்வு ஆராய்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கோட்டை வைரவருக்கு பொங்கல் பொங்கி வணங்கினார்கள். யாழ்.கோட்டை பகுதியில் அமெரிக்க பல்கலைகழகம் , யாழ்.பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாசார நிலையம் உள்ளிட்டவை இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆடிப்பிறப்பை முன்னிட்டு , கோட்டைக்குள் இருக்கும் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக பொங்கி , கொழுக்கட்டை , மோதகம் அவித்து கூழ் காய்ச்சி வைரவருக்கு படைத்து வணங்கினார்கள். அதன் போது அகழ்வு பணிக்காக வந்திருக்கும் அமெரிக்க மற்றும் வெளிமாவட்டத்தவர்களும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.