இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

யாழ்.கோட்டையில் மீட்கப்பட்டவை, போர்த்துக்கீசர் கால எலும்பு எச்சங்கள்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.கோட்டை உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துகீசர் காலத்தான் ஆக இருக்கலாம் என நம்புகின்றோம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டை உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.  அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்று உள்ளன.

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் (ஸ்கானர் மூலம் ) ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

அந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே இந்த அகழ்வு பணிகள் முன்னேடுக்கப்பட்டுகின்றன.

கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போர்த்துகீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்க பெற்று உள்ளான. தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும் , தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வு பணியின் போது மனித எழும்பு எச்சம் மீட்கப்பட்டன. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புகின்றோம். ஏனெனில் போத்துக்கீசர் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மேற்கு நோக்கியவாறே அடக்கம் செய்யும் பழக்கம் இருந்தது.

அதன் பின்னரான கால பகுதியில் தான் இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் வந்தது. ஆகவே அவை போர்த்துக்கீசர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம்.

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோக பூர்வமாக செல்ல முடியாது. மீட்கப்பட்ட எலும்பு எச்சம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுகளின் பின்னரே உத்தியோக பூர்வமாக தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.