இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் – மக்கள் – அவ்வாறில்லை என்கிறார் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாதம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

டெங்கு நோய் பராவது தடுப்பதில் புகையூட்டல் மற்றும் சுற்றுச்சூழலை நுளம்புகள் வளரும் பொருட்கள் இல்லாது சுத்தமாகப் பேணுதல் ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனச் சந்தேகம் எழுந்ததும் அதுகுறித்துச் சிகிச்சை வழங்கும் வைத்தியரால் நோயாளியின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் வழங்கப்படும்.

சுகாதார வைத்திய அதிகாரி உடனடியாகப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கம் மற்றும் நோயாளியின் வசிப்பிடத்திற்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு டெங்கு நோயாளி குறித்த தகவலைத் தெரிவிப்பார். இதனைத் தொடர்ந்து மலேரியாத் தடைப்பகுதியின் விசேட புகையூட்டும் பிரிவினர் நோயாளியின் வீட்டுச் சூழலைக் குறிவைத்துப் புகையூட்டலை மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய நுளம்புகளைக் கொல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளவர்.  இவ்வாறு நுளம்புகளை அழிப்பது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்யப்பட வேண்டும்.

காரணம் இ டெங்கு நோயாளி ஒருவரது வீட்டில் ஒரு நுளம்பு அவரைக் கடித்திருந்தால் அந்த நுளம்பு டெங்கு வைரசுத் தொற்றுக்கு ஆளாகி விடும். அவ்வாறு டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு அந்த வீட்டில் அல்லது அயலில் உள்ள சுகதேகி ஒருவரைக் கடித்தால்இ அந்தச் சுகதேகிக்கு டெங்கு வைரசு பரவி அவர் டெங்கு நோயாளியாக மாறுவார்.

ஆகவே டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு இன்னொருவருக்குக் கடித்து டெங்கு நோயைப் பரப்புவதற்கு முன்னரே அதனைக் கொல்லவேண்டும். இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய நடவடிக்கையாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அனேகமான நோயாளிகள் வெளிமாவட்டங்களில் இருந்தே வருகிறார்கள். அவர்கள் தமக்குக் காய்ச்சல் வந்ததும் தமது வீட்டுக்கு வந்துஇ அங்கிருந்தே வைத்தியசாலைக்கு வருகிறார்கள். இவர்கள் டெங்குக் காய்ச்சலுடன் வீடுகளில் இருக்கும்போது அங்கு இவர்களை நுளம்பு கடித்தால் அந்த நுளம்பு இன்னொருவரைக் கடிக்குமுன்னர் அழிக்கப்படவேண்டும். அத்துடன் அந்தவீட்டிலும் அயலிலும் உடனடியாக விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நுளம்பு உருவாகும் இடங்கள் அழிக்கப்பட்டு நுளம்புகளின் அடர்த்தி குறைக்கப்படவேண்டும்.

இதன்மூலம் மாவட்டத்தில் டெங்கு உள்ளுரில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட முடியும்.

இதன் அடிப்படையில்தான்; எவருக்காவது டெங்கு நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவுடன் உடனடியாக (24 மணிநேரத்தினுள்) நுளம்புகளை அழிக்கும் நோக்குடன் அந்த நோயாளியின் வதிவிடம் தொடர்பான விபரம் குறுந்தகவல் (ளஅள) மூலம் சுகாதார வைத்திய அதிகாரிஇ பிராந்திய மலேரிய தடுப்பு அதிகாரி ஆகியோருக்கு வைத்தியசாலைகளில் இருந்து வழங்கப்படும் நடைமுறை கிளிநொச்சியில் இருந்து வந்தது.

ஆனால் இப்பொறிமுறை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் இதனால் கிளிநொச்சியில் டெங்கு பரவக்கூடிய அபாயநிலை நேரிட்டுள்ளதாகவும் பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான அண்மைய உதாரணமாகத் திருநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கொழும்பில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தமது வீட்டுக்கு வந்து கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் கடந்த 06 தினங்களாக டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றுவருவதாகவும்இ இன்றுவரை புகையூட்டல் நடவடிக்கையோ அல்லது விழிப்புணர்வுச் செயற்பாடுகளோ அவரது வதிவிடப் பிரதேசத்தில் சுகாதாரப் பரிவினரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது

அவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆனால் டெங்கு காச்சலை பரப்புக்கின்ற நுளம்புகள்இ மற்றும் அதன் குடம்பிகள் காணப்படுகிறது என பூச்சியல் ஆய்வு பிரிவினர் உறுதிப்படுத்துகின்றபோது அந்த இடங்களில் மாத்திரம் புகையூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருநகர் வடக்கில் டெங்கு காச்சல் ஏற்பட்டுள்ள நோயாளரின் வீட்டுச் சுற்றுச் சூழலில் டெங்கு காச்சலை பரப்பரக் கூடிய நுளம்போ அல்லது குடம்பிகளோ இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவேதான் பூகையூட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers