உலகம் பிரதான செய்திகள்

ஜெர்மனியில் பேருந்து ஒன்றினுள் கத்திக்குத்து தாக்குதல் – 14 பேர் காயம்


ஜெர்மனியில் பேருந்து ஒன்றினுள் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள லூயிபெக்(Luebeck)  நகரில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தனது ஆசனத்தினை மூதாட்டி ஒருவருக்கு விட்டுக்கொடுத்த போது ஆசனத்தினை வழங்கிய நபரின் மார்பில் திடீர் என கத்தியால் குத்தியுள்ள நபர் ஒருவர் அதனையடுத்து அருகே இருந்த பலரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளநிலையில் தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Firefighters attend passengers of a bus in Luebeck, northern Germany, Friday, July 20, 2018 after a man attacked people inside. (TNN/dpa via AP)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers