இலங்கை பிரதான செய்திகள்

90 மில்லியன் ரூபாவில் முல்லைத்தீவில் புதிய பேருத்து நிலையம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரில் 90 மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ள புதிய பேருத்து நிலையத்துக்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட  பல அரசியல் பிரமுகர்களால் இன்று (21.07.18) காலை பதினோரு மணியளவில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர,  நிதி ராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் கரைதுறைப்பற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்களென பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது  கம்பெரலிய விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 200 மில்லியன் பொறுமதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான அனுமதிக் கடிதங்களும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.