Home இலங்கை முல்லைத்தீவு மக்களின் நிலங்கள் மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன்!

முல்லைத்தீவு மக்களின் நிலங்கள் மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன்!

by admin

முன்னாள் போராளிகளுக்காக விசேட வேலைத்திட்டம்!!- முல்லைத்தீவில் மங்கள சமரவீர

வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள முல்லைத்தீவு மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மங்கள சமரவீரவின் உரை

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகைதந்தபோது சில குறைபாடுகள் என்னிடம் முன்வைக்கப்பட்டது .அதில் முல்லைத்தீவு மத்திய பேரூந்து நிலையம் அமைத்துதருமாறு கோரிக்கை முன்வைக்கபட்டது. அந்த வேண்டுகோளை அடுத்து நானும் எனது அமைச்சின் செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரோடு கதைத்து இந்த முக்கிய தேவையாக இருக்கின்ற இந்த பேரூந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று இங்கு வருகைதந்திருக்கின்றோம்.

போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம்

சுனாமி அனர்த்தத்தினாலும் அத்தோடுமட்டுமல்ல கடந்தகால போரினாலும் நீங்கள் மிகவும் பாதிக்கபட்டீர்கள் இவற்றிலிருந்து உங்களை மீட்டு எடுப்பதற்கு தேவையான வேலைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தபடவேண்டி இருந்தது.கடந்த 10 வருடம் கடந்து யுத்தம் நிறைவுற்ற நிலையிலும் இன்னும் நீங்கள் தேவைகள் உடையவர்களாக இருக்கின்றீர்கள் .எமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டம் வறிய மக்களை கொண்ட மாவட்டமாக அடையாளப்படுத்தி உங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை வேகமாக கொண்டுவருவதற்க்கான திட்டத்தை வகுத்திருக்கிறது .

யுத்ததால் உறவுகளை இழந்தவர்களும் அங்கவீனமுற்றவர்களும்

இங்குள்ள மக்களை பார்கின்ற போது யுத்ததால் உறவுகளை இழந்தவர்கள் மட்டுமல்ல பலர் அங்கவீனமுற்றவர்களாகவும் பலர் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையில் இருந்து உங்களை மீட்பதற்கான திட்டத்தை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் வறுமைக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களையும் எமது அரசாங்கம் அடையாளபடுத்தியிருக்கின்றது. வறுமைக்குள் வாழுகின்ற மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்கான வேலைத்திட்டத்தை எமது அரசு மேற்கொள்ளவிருக்கின்றது.

இன்று இந்த மாவட்ட மக்களுடைய நீண்டகால தேவையாக இருக்கின்ற மத்திய பேரூந்து நிலையத்துக்கு 90மில்லியன் ரூபாவை ஒதுக்கி வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளோம் .வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக எமது அரசாங்கம் பல பில்லியன் நிதிகளை ஒதுக்கியுள்ளது.குறிப்பாக நந்திக்கடல் களப்பின் அபிவிருத்திக்காகவும் நிதிகளை ஒதுக்கியிருக்கின்றோம். முல்லைத்தீவில் இரண்டு பாரிய பாலங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பிக்கவுள்ளோம் .அதுமட்டுமல்ல இந்த மக்களது களப்பு பிரதேசங்கள் வனஜீவராசிகள் திணைக்களம் மூலம் வர்த்தமானி அறிவித்தல்மூலம் பிரகடன படுத்தப்பட்டுள்ளதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது .இதனை சம்பந்தப்படடவர்களுடன் பேசி இந்த பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டுஇந்த மக்களுக்கு வழங்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் .

நுண்கடனால் அதிகரித்துள்ள தற்கொலைகள்

இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களும் ஏனைய மாவட்ட்ங்களில் உள்ள மக்களும் சுழற்சிமுறையிலான் நுண்கடந்திட்டங்களை பெற்று அவற்றை செலுத்தமுடியாது மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதை நாங்கள் நன்கு அறிவோம் .நீங்கள் வட்டிக்கு செலுத்துகின்றவர்களுடைய கையாட்களாக இப்போது மாறியிருக்கின்ரீர்கள் .நுண் கடன்களை பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தமுடியாது பலர் இந்த பிரதேசத்தில் தற்கொலைக்கு சென்றிருக்கின்ற நிலையை காணுகின்றோம் .அதாவது இவ்வாறு கடன்தொகைகளை பெற்று அந்த கடன்களை செலுத்தமுடியாது இருக்கின்ற பெண்களின் கடன்களை சுமார் ஒரு இலட்ச்சம் ரூபாய் வட்டி பணத்தினை செலுத்தி அதிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கின்ற வேலைத்திடடம் நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த்து வைக்கப்படவிருக்கின்றது.எதிர்காலத்தில் இவ்வாறு நுண்கடன்களை பெருகின்றவர்களுடைய கடன் வலுவை குறைக்கின்றதோடு அந்த கடன்களின் உச்சகடட எல்லையினை 30சதவிகிதமாக மட்டுப்படுத்துவதற்கு நாம் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவிருக்கின்றோம் .

முன்னாள் போராளிகளுக்கு விசேட வேலைத்திட்டம்

குறிப்பாக இதற்க்கு சமாந்தரமாக வறுமையை ஒழிப்பதற்காக சமுர்த்தி திடடத்தை முன்னெடுத்துள்ளோம் . யுத்தத்தினால் அங்கவீனம் உற்ற பெண்களுக்காக விசேட வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதர்க்கான் நிதியினை நாம் ஒதுக்கியிருக்கின்றோம் இதற்கான செயற்திடடம் வடக்கு மாகாண சபை மற்றும் அரசாங்க அதிபர் ஊடக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் முன்னாள் போராளிகளுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்படட அங்கவீனம் உற்றவர்கள் அவயவங்களை இழந்தவர்கள் தமது தொழில்களை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்காக இன்று நாங்கள் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியூடாக என்டபிறைஸ் ஸ்ரீலங்கா என்ற கடந்திட்டத்தினையும்,அறிமுகப்படுத்தியுள்ளோம் .இத்தனையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் . அத்தோடு கம்பேரேலிய என்றகிராம் எழுச்சி வேலைத்திடடம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

இதன்மூலம் முல்லைத்தீவு மாவடடத்தில் ஐந்து பிரதேச செயலர் பிரிவுக்கும் தாலா 200 மில்லியன் வேதம் முல்லைத்தீவுக்கு 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு ஐந்து மாதங்களில் மேற்கொள்வதற்கு பணித்திருக்கின்றோம். எனவே அரசாங்கம் இந்த பிரதேசத்திலே முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திலே இன மத மொழி கடசி பேதங்களை துறந்து அனைவரும் இணைந்து இந்த முல்லைத்தீவு மாவடடத்தை வளர்க்க முன்வருமாறு அழைக்கின்றேன் என்கிறார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More