இந்தியா பிரதான செய்திகள்

பாரவூர்தி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் – 15 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரவூர்தி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், 15 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் பாரவூர்தி உரிமையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இன்று 3-வது நாளாக நீடிக்கின்ற இந்தப் போராட்டம் காரணமாக இந்தியா முழுவதும் 68 லட்சம் பாரவூர்திகள்; ஓடவில்லை. தமிழகத்தில் 4½ லட்சம் பாரவூர்திகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் இந்தியா முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தமிழகத்தில் 500 கோடி ரூபா மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.