பிரதான செய்திகள் விளையாட்டு

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது

Cricket – Sri Lanka v South Africa -Second Test Match – Colombo, Sri Lanka – July 23, 2018 – Sri Lanka’s wicketkeeper Niroshan Dickwella (R) celebrates after taking the catch to dismiss South Africa’s Temba Bavuma. REUTERS/Dinuka Liyanawatte

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

20 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன அடிப்படையில் முதல் இன்னிங்சில் 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் .ரண்டாவது இன்னிங்சியை ஆரம்பித்த இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து 490 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் 199 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 – 0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 14 other subscribers