கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள கிரிக்டவுனில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அதில் பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட நபரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி கிரிக்டவுனிலுள்ள கடைகளையும் உணவகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனைப் பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment