இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத கடவை காப்பாளர் பலி :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தலைமன்னாரில் இருந்து நேற்று திங்கட்கிழமை(23) இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத கடவை காப்பாளரான (காவலாளி) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 11 மணியளவில் உயிர்த்தராசன் குளம் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தில் குறித்த புகையிரத கடவையில் கடவை காப்பாளராக கடமையாற்றிய மாளிகைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முருங்கன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.