சினிமா பிரதான செய்திகள்

சூர்யா செய்த இரண்டு நற்காரியங்கள்


 
பிரபல நடிகர் சூர்யா தயாரித்து அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையின் வடபழனியில் நடைபெற்றது. சூர்யா, கார்த்தி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

விழாவில் விவசாயிகளுக்கு தனது அகரம் பவுண்டேசன் சார்பில் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதி உதவியினை வழங்கினார். விவசாயம் மற்றும் விவசாய மேம்பாடு, ஆராய்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று்ம் சூர்யா தெரிவித்திருந்தார்.

கார்த்தி – சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் படத்தை பாண்டிராஜ் இக்கியுள்ளார். இன்றைய நிகழ்வில் படத்தின் இயக்குனருடன் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு முதலியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி கழிப்பறைகளை புதுப்பிக்கும் நடவடிக்கை

தனது அகரம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வரும் நிலையில், தற்போது பள்ளி கழிப்பறைகளை புதுப்பிக்கும் நடவடிக்கையையும்  நடிகர் சூர்யா  ஆரம்பிக்கின்றார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றார். அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் கல்லூரி கல்விக்கு உதவி செய்து வருகிறார்.  தனது 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  நேற்று மாவட்டத்துக்கு 10 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார் சூ

விரைவில் இப்பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.  இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகளை புதுப்பிப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers