இலங்கை பிரதான செய்திகள்

வாழைத்தோட்டம் டினுகவின் சகா லொக்கா 9MM ரக கைத்துப்பாக்கியுடன் கைது..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


கொழும்பைச் சேர்ந்த பாதாள உலக தலைவர் வாழைத்தோட்டம் டினுக என்பவரின் பிரதான சகா எனக் கூறப்படும் லொக்கா என்ற நபர், 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று முன்தினம் இரவு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் டினுக வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்து வருவதுடன் அவரது உத்தரவின் பேரில், லொக்கா என்ற இந்த சந்தேக நபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மருதானையில் மாத்வவரு என்ற பாதாள உலகக்குழு முக்கியஸ்தர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து படுகாயம் ஏற்படுத்திய சம்பவத்துடன் லொக்காவுக்கு தொடர்பு இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த மார்ச் மாதம் சானா என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து காயம் ஏற்படுத்திய சம்பவத்துடன் சந்தேக நபருக்கு தொடர்புள்ளது. கப்பம் செலுத்தாத காரணத்தினால், இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்“. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.