Home சினிமா விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா

by admin



விஜய் சேதுபதி நடினக்கும்   ‘சீதக்காதி’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.  `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் சீதக்காதி படம் விஜய் சேதுபதியின்  25ஆவது படமாகும். அத்துடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கின்றார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் ‘சீதக்காதி’ படத்தில் இருந்து `மேக்கிங் ஒஃப் ஐயா’ என்ற காணொளியை படக்குழு வெளியிட்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More