பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேசுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி:


பங்களாதேஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 49.3 ஓவர்களில் 271 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 272 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்றள்ள நிலையில் மேற்கிந்தியதீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் தொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்தநிலையில் 3-வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.