பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாத பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டப்பின் படிப்பிற்காக ஒரு பேராசியருக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதுடன் பட்டப்பின் படிப்பு காலத்தில் சம்பளமும் வழங்கப்படுவதால் அவர்கள் மீண்டும் நாடு திரும்பாத காரணத்தால் அரசாங்கத்துக்கு ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபா நஸ்டம் ஏற்படுகின்றது.
இதனால் பட்டப்பின் படிப்பு நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பாத பேராசிரியர்களிடம் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வியமைச்சு பிணையாளர்களிடமாவது அந்தப் பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது
Spread the love
Add Comment