இலங்கை பிரதான செய்திகள்

ஒரு விளையாட்டு வீரராக, குமார் சங்கக்கார நல்ல மனிதர், ஆனால் அரசியல் அனுபவம் அற்றவர்…

குமார் சங்கக்கார ஒரு விளையாட்டு வீரராக நல்ல மனிதர் என்ற போதிலும் அரசியல் ரீதியாக அவருக்கு எந்த அனுபவமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒருவருக்கு அரசியலில் ஈடுபடுவது சிரமம் எனவும் தனக்கு அரசியலை கற்றுக்கொள்ள நீண்டகாலம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனைத் தெரிவித்த அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், குமார் சங்கக்காரவுக்கோ, அல்லது எந்தவொரு பொது வேட்பாளருக்கோ ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் கட்சியின் தலைமைத்துவத்தை வெற்றி பெறச்செய்ய முன்னிற்பதாகவும் அவ்வாறு இல்லாவிடின் அரசியலில் ஆர்வமுள்ள ஒருவரை கட்சியின்; தலைமைத்துவத்தில் முன்னிறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.