எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாக இரா. சம்பந்தன் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் தமக்கு வழங்கப்பட வேண்டும் என தாம் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகிறோம்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் எனவும் அக்கட்சி ச அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போன்றே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வாரமும் சபாநாயகரைச் சந்தித்து கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்துள்ள்ளதாகவும் ஓகஸ்ட் வரையில் சபாநாயகர் அவகாசம் கோரியுள்ளதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Add Comment