இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை பாதுகாக்க இளைஞர் அமைப்பு உருவாக்கம்


இந்தியா முழுவதிலும் முஸ்லிம் சிறுபான்மையினர் பல்வேறு காரணங்களுக்காக தீவிர வலதுசாரி சிந்தனையாளர்களால் தாக்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளையடுத்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக ஜமாத்-எ – இளைஞர் அமைப்பு என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் முதல்கட்டமாக அடுத்த 10 மாத காலத்தில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரை போல தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பசு பாதுகாப்பு எனும் பெயரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகமாகி வருகின்றதனால் முஸ்லிம்கள் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டி இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers