இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் – அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை(படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பூநகரியில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றுள்ளது.  இன்று(29-07-2018) பூநகரி மத்திய கல்லூரியில் இந் நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.

இதன் போது பதிவாளர் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர், ஆட்பதிவுத்திணைக்களம், காவல்துறை தபால், சமூகசேவைகள், சமூர்த்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மோட்டார் போக்கவரத்து, சட்ட விரோத ஆணைக்குழு, மின்சார சபை, தேசிய வீடமைப்பு, ஊழியர் சேமலாக நிதி, மத்திய வங்கி, அரசகரும மொழிகள், சுகாதார திணைக்களம், போன்ற திணைக்களங்களின் சேவைகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலளர் கிருஸ்ணேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap