இலங்கை பிரதான செய்திகள்

இராமநாதபுரம் மா.வி கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார் மனோகணேசன் ( படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கான கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இன்று பதினொன்று முப்பது மணியளவில் நாட்டில்வைத்தார்

இன் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா,பசுபதிப்பிள்ளை ,தவநாதன் அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், கரைச்சி பிரதேச செயலளர் முகுந்தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் , உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.