இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் முருங்கனில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்கு நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­துச் சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார் 4 மணி நேரத்­தில் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,

முருங்கன் பகுதியில் உள்ள ஆல­யத்­துக்­குப் பெற்­றோ­ரு­டன் 2 வயதுடைய சிறு­வன் நேற்­று (29) மதியம் 1 மணி­ய­ள­வில் சென்­றுள்­ளார்.  சிறிது நேரத்­தின் பின்­னர் சிறு­வ­னை ஆலய பகுதியினுள் காணாத நிலையில் பெற்­றோர் தேடி­யுள்­ள­னர். எனினும் சிறுவனை அங்கே காணவில்லை.

உடனடியாக பெற்றோர் முருங்கன் காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததோடு,சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ஆலயத்திற்கு வந்த திருக்­கோ­வி­லைச் சேர்ந்­த ஒருவர் வழி­பாடு முடி­வ­டை­வ­தற்கு முன் ஆலயத்தில் இருந்து வெளி­யே­ சென்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதனையடுத்து உடனடியாக திருக்­கோ­வில் காவல்துறையினருக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது.

இதன் போது குறித்த நபர் வவு­னியா பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து மன்­னார் நோக்­கிச் செல்­லும் பேருந்­தில் சந்­தே­க­ ந­பர் சிறு­வ­னு­டன் ஏறி­யதை அவதானித்த வவுனியா காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்ததுடன் குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.

சிறு­வ­னைக் கடத்­தி­ய­மைக்­கான கார­ணம் இது வரை வெளியாகவில்லை. காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.