சினிமா பிரதான செய்திகள்

இந்த வாரம் 11 திரைப்படங்கள் வெளியாகின்றன!


கடந்த சில மாதங்களாக  வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் இந்த வாரம் 11 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன. 1000க்கு குறைவான திரையரங்குகளே காணப்படுகின்றன. இந்த நிலையில் ஒரு வாரத்தில் மூன்று திரைப்படங்களுக்கே திரையரங்குகள் கிடைப்பது சிரமம் என்ற நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கடைக்குட்டி சிங்கமும், தமிழ்படம் 2வும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகின்றன. இந்நிலையில் இந்த வாரம்  விஜய் சேதுபதியின் ஜுங்காவும், திரிஷாவின் மோகினியும் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கஜினிகாந்த், மணியார் குடும்பம், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அழகுமகன், போயா, அரளி, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, கடல் குதிரைகள் முதலிய திரைப்படங்களின் வெளியீட்டு திகதி அறிவித்து விளம்பரம் வெளியிட்டப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறுமுதலீட்டுப் படங்கள். அடுத்த வாரம் கமலின் விஸ்வரூபம் 2 வெளியாக இருப்பதால் இத் திரைப்படங்கள் வெளியாகின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers