உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

தஜிகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது தாக்குதல் – 4 பேர் பலி

தஜிகிஸ்தானுக்கு சுற்றுலாப்பயணம் செய்த வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றிஐந்த நிலையில் அந்நாட்டின் தலைநகரில் வைத்து அவர்கள் மீது காரால் மோதியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தத் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.