பிரதான செய்திகள் விளையாட்டு

ரொனால்டோ வெற்றிடத்தை காரேத் பேலே நிரப்புவார்


ரொனால்டோ வெற்றிடத்தை காரேத் பேலே(Gareth Bale) வால் நிரப்ப முடியும் என ரியல் மட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய்(Julen Lopetegui )  தெரிவித்துள்ளார். போர்த்துக்கல் கால்பந்து அணித்தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டா கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 வரையான காலப்பகுதியில் ரியல் மட்ரிட் அணிக்காக விளையாடி ரியல் மட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

தற்போது ரொனால்டோ அணியில் இருந்து சென்றதும் அந்த இடம் வெற்றிடமாகவே உள்ள நிலையில் அந்த அணியில் உள்ள காரேத் பேலே ரொனால்டோ இடத்தை நிரப்புவார் என்று பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார். காரேத் பேலே லிவர்பூல் அணிக்கெதிரான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers