பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபதுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி:


பங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபதுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின மேற்கிந்தியதீவுகள் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 114 என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியதீவுகள் அணி களமிறங்கவிருந்த போதும் மழை காரணமாக 11 ஓவரில் 91 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மேற்கிந்தியதீவுகள் 9.1 ஓவரிலேயே 93 ஓட்டங்களைப் பெற்று ; எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான 2-வது இருபதுக்கு இருபதுப் போட்டி போட்டி எதிர்வரும் 4ம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers