பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது.  தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 245 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 42.5 ஓவர்களில் 06 விக்கட் இழப்புக்கு 246 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்த வகையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap