உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் கொலை


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த மூன்று பேரும் இந்தியா, மலேசியா மற்றும் மாசிடோனியாவை சேர்ந்தவர்கள் எனவும் இதனை தீவிரவாதிகள் மேற்கொண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் காபூல் விமான நிலையத்தை நோக்கி தங்களது காரில் சென்றுகொண்டிருக்கும்போது கடத்தப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த மூன்று பேரும் பிரான்சை சேர்ந்த உணவு நிறுவனம் ஒன்றில் கடமை புரிந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers