இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் பகுதிகளில் 11 பேர் கைது என்கிறது காவற்துறை…


யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பிரதேசங்களில் நேற்று (02.08.18) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த பல நாட்களாக தொடரும் வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல் மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பிரதி காவற்துறை மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற காவற்துறை நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் குறிப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனுராக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த சில நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் காவற்துறை நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் யாழில் இயங்கும் சட்டவிரோத குழுக்களில் குறைந்த வயதுடையவர்கள் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் காவற்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers